ADDED : மே 22, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிபிளிசி: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் காலிறுதிக்கு ராம்குமார் ராமநாதன் ஜோடி முன்னேறியது.
ஜார்ஜியாவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், சித்தாந்த் ஜோடி, நியூசிலாந்தின் அஜீத் ராய், லாட்வியாவின் ராபர்ட் ஜோடியை சந்தித்தது.
முதல் செட் 5-5 என இழுபறி ஆனது. பின் இந்திய ஜோடி 7-5 என கைப்பற்றியது. தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் கார்தீக், சோமானி ஜோடி 4-6, 2-6 என ஜப்பானின் உச்சிடா, தாய்லாந்தின் இசாரோ ஜோடியிடம் தோற்றது.