ADDED : ஏப் 10, 2025 08:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மான்டி கார்லோ: ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் தொடரின் காலிறுதிக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.
மொனாக்கோவில் ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, இத்தாலியின் சைமன் போலெல்லி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 2-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என வசப்படுத்தியது. பின் நடந்த 'சூப்பர் டை பிரேக்கரிலும்' 10-7 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம் 38 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 2-6, 7-6, 10-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது.