ADDED : ஏப் 17, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முனிக்: ஜெர்மனி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.
ஜெர்மனியில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அமெரிக்காவின் ராஜிவ் ராம், பிரிட்டனின் ஜமை முர்ரே ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-4 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடி, அடுத்த செட்டையும் 6-3 என வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 5 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி, போலந்தின் ஜிலின்ஸ்கி ஜோடியை சந்திக்க உள்ளது.