ADDED : செப் 29, 2025 10:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: டோக்கியோ டென்னிஸ் பைனலுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 45 வயது போபண்ணா, ஜப்பானின் டகெரு யுஜுகி ஜோடி, அமெரிக்காவின் ஈவன் கிங், கிறிஸ்டியன் ஹாரிசன் ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 4-6 என இழந்த போபண்ணா ஜோடி, அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி 'சூப்பர் டை பிரேக்கருக்கு' சென்றது. இதில் இருவரும் மாறி மாறி கேம்களை வசப்படுத்தினர்.
முடிவில் போபண்ணா ஜோடி 18-16 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 35 நிமிடம் நடந்த போட்டி முடிவில் போபண்ணா ஜோடி 4-6, 6-3, 18-16 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.