உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 05, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
மம்பெலா: தென் ஆப்ரிக்காவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் அதர்வா சர்மா, மத்வின் காமத் ஜோடி முன்னேறியது. இதில் பெல்ஜியத்தின் ரொமைன் பவுகான், அமெரிக்காவின் லியனார்டோ வேகா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-4 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 4-6 என இழந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதை இந்திய ஜோடி 4-10 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 6-4, 4-6, 4-10 என்ற கணக்கில் தோல்வியடைய, இரண்டாவது கிடைத்தது.
