/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
'நம்பர்-1' சின்னருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை சிக்கியதால்...
/
'நம்பர்-1' சின்னருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை சிக்கியதால்...
'நம்பர்-1' சின்னருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை சிக்கியதால்...
'நம்பர்-1' சின்னருக்கு தடை * ஊக்கமருந்து சோதனை சிக்கியதால்...
ADDED : பிப் 15, 2025 11:11 PM

லண்டன்: ஊக்கமருந்து விவகாரத்தில் விதிக்கப்பட்ட மூன்று மாத தடையை ஏற்றார் சின்னர்.
இத்தாலி டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர் 23. சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். உலகின் 'நம்பர்-1' வீரரான இவரிடம், கடந்த 2024, மார்ச் மாதம் ஊக்கமருந்து சோதனை நடந்தது.
இதில் தடை செய்யப்பட்ட மருந்து உடலில் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னர் கூறுகையில், ''விரலில் ஏற்பட்ட காயத்திற்கு, பிசியோதெரபிஸ்ட், வலி நிவாரணி மருந்தை 'ஸ்பிரே' செய்தார். அடுத்து டிரெய்னர் மாசாஜ் செய்ய போது, தவறுதலாக 'குளோஸ்டெபால்' மருந்து உடலில் கலந்து விட்டது,'' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட சர்வதேச டென்னிஸ் ஏஜென்சி, சின்னரை, 'சஸ்பெண்ட்' செய்யாமல், அப்படியே விட்டுவிட்டது. இருப்பினும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.,), 'சின்னருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்க வேண்டும்,' என, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (லாசேன், சுவிட்சர்லாந்து) முறையிட்டது.
இதுகுறித்து சின்னர் கூறுகையில்,''எனது அணியினர் செய்த தவறுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மூன்று மாத தடையை (பிப். 9 முதல் மே 4 வரை) ஏற்றுக் கொண்டால் வழக்கு முடிவுக்கு வரும் என டபிள்யு.ஏ.டி.ஏ., தெரிவித்ததை ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றார்.
இதையடுத்து தனது அப்பீலை டபிள்யு.ஏ.டி.ஏ., திரும்பப் பெற்றது. அடுத்து மே 7ல் துவங்கும் இத்தாலியின் ரோம் தொடரில் சின்னர், மீண்டும் பங்கேற்பார்.

