தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ்: அரையிறுதியில் ஆன்ட்ரீவா

டென்னிஸ்: அரையிறுதியில் ஆன்ட்ரீவா

டென்னிஸ்: அரையிறுதியில் ஆன்ட்ரீவா


ADDED : ஏப் 28, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் அரையிறுதிக்கு ஆன்ட்ரீவா முன்னேறினார்.

ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிற்கு (மே 18-ஜூன் 7) தயாராகும் வகையில் களிமண் தரையில் போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் 'நம்பர்-9' வீராங்கனை, ரஷ்யாவின் ஆன்ட்ரீவா, 24வது இடத்திலுள்ள கனடாவின் லேலா பெர்ணான்டசை எதிர்கொண்டார்.

'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை ஆன்ட்ரீவா 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம், 51 நிமிடம் நீடித்த இப்போட்டியில் ஆன்ட்ரீவா, 7-6, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை கஜகஸ்தானின் ரிபாகினா, ஆஸ்திரியாவின் பொடபோவாவை சந்தித்தார். ஒரு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போட்டி முடிவில் ரிபாகினா 6-7, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

சின்னர் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் இத்தாலியின் சின்னர், 6-2, 7-5 என பிரிட்டனின் நோரியேவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us