உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 07, 2026 10:59 PM

அ நிறம் | அளவு
லாகோஸ்: ஐ.டி.எப்., டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் மாயா முன்னேறினார்.
போர்ச்சுகலின் லாகோஸ் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி (1038 வது இடம்), லிதுவேனியாவின் ஜஸ்டினாவை (246 வது இடம்) எதிர்கொண்டார்.
முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் அசத்திய மாயா, 7-6 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட இவர், அடுத்த செட்டை 6-1 என எளிதாக வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 58 நிமிடம் நீடித்த இப்போட்டியில் மாயா, 7-6, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
