ADDED : ஏப் 27, 2026 11:21 PM

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா.
ஸ்பெயினில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் நடக்கிறது. பிரெஞ்ச் ஓபன் டென்னிற்கு (மே 18-ஜூன் 7) தயாராகும் வகையில் களிமண் தரையில் போட்டிகள் நடக்கின்றன. பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை பெலாரசின் சபலென்கா, 14வது இடத்திலுள்ள ஜப்பானின் ஒசாகாவுடன் மோதினார்.
'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை ஒசாகா 7-6 என கைப்பற்றினார். பின் சுதாரித்த சபலென்கா, அடுத்த இரு செட்டையும் 6-3, 6-2 என எளிதாக கைப்பற்றினார். 2 மணி நேரம், 22 நிமிடம் நீடித்த இப்போட்டியில் சபலென்கா 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் லேலா (கனடா), கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), பொடபோவா (ஆஸ்திரியா), பாப்டிஸ்ட் (அமெரிக்கா) வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.
