தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/அசராத வீனஸ் வில்லியம்ஸ்

அசராத வீனஸ் வில்லியம்ஸ்

அசராத வீனஸ் வில்லியம்ஸ்


ADDED : ஜன 06, 2026 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 11:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெலிங்டன்: ஆக்லாந்தில் (நியூசி.,) நடந்த ஏ.எஸ்.பி., கிளாசிக் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், அமெரிக்காவின் 'சீனியர்' வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், போலந்தின் மாக்டா லினட்டிடம் 4-6, 6-4, 2-6 என்ற செட்களில் தோல்வி அடைந்தார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் அரங்கில் வீனஸ் பங்கேற்ற 1,101வது போட்டி. உலக ரேங்கிங் பட்டியலில் 582வது இடத்தில் உள்ள இவர், 45 வயதிலும் அசராமல் ஆடினார். 52வது இடத்தில் இருக்கும் லினட்டுக்கு, 33, சவால் கொடுத்தார். 1994ல் தொழில்ரீதியான டென்னிசில் வீனஸ் களமிறங்கிய போது, லினட்டுக்கு 2 வயது தான். தற்போது தன்னைவிட 12 வயது குறைவான லினட்டுக்கு எதிராக ஏழு 'ஏஸ்'கள் வீசி மிரட்டினார் வீனஸ்.

காலிறுதியில் எகிப்து அணி

ரபாத்: மொரோக்கோவில் ஆப்ரிக்க கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. 'ரவுண்ட்-16' போட்டியில் எகிப்து, பெனின் அணிகள் மோதின. ஆட்ட முடிவில், 1-1 என சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் இப்ராஹிம், முகமது சாலா தலா ஒரு கோல் அடிக்க, எகிப்து அணி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் நைஜீரிய அணி, மொசாம்பிக்கை 4-0 என வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பேர்ஸ்டோவ் விளாசல்

செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவின் செஞ்சுரியனில் நடந்த எஸ்.ஏ., 20 தொடரின் லீக் போட்டியில் பிரிட்டோரிய கேப்பிடல்ஸ் அணி, 20 ஓவரில் 176/7 ரன் எடுத்தது. இதை விரட்டிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு குயின்டன் (41 பந்து, 79 ரன்), பேர்ஸ்டோவ் (45 பந்து 85 ரன்) கைகொடுத்தனர். மஹாராஜ் வீசிய போட்டியின் 12வது ஓவரில் வாணவேடிக்கை காட்டிய பேர்ஸ்டோவ் 34 ரன் (6,6,6,4,6,6) விளாசினார். ஈஸ்டர்ன் கேப் அணி, 14.2 ஓவரில் 177/0 ரன் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

எக்ஸ்டிராஸ்

* புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ், ஜன. 18ல் மெல்போர்னில் துவங்குகிறது. இதற்கான பரிசுத் தொகை 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஒற்றையரில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 25.22 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.

* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜன. 9ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் டில்லி அணி கேப்டன் ஜெமிமா 25, கூறுகையில்,'' அணிக்கு தலைமை ஏற்பது, சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையும். ஏற்கனவே மும்பை அணிக்கு கேப்டனாக இருந்த அனுபவம், இதில் கைகொடுக்கும்,'' என்றார்.

* சூரத்தில் நடந்த விஜய் மெர்ச்சன்ட் டிராபி, பிளேட் குரூப் பைனலில் ஜம்மு அண்டு காஷ்மீர் அணி (400 ரன்), மிஜோரம் அணியை (118/10, 100/10) இன்னிங்ஸ், 182 ரன்னில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

* பெண்களுக்கான சர்வதேச 'டி-20' தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 2 இடம் முன்னேறி, 13வது இடம் பிடித்தார். பவுலர் வரிசையில் இந்தியாவின் தீப்தி, 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us