/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அல்காரஸ், ஸ்வியாடெக் அசத்தல் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...
/
அல்காரஸ், ஸ்வியாடெக் அசத்தல் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...
அல்காரஸ், ஸ்வியாடெக் அசத்தல் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...
அல்காரஸ், ஸ்வியாடெக் அசத்தல் * யு.எஸ்., ஓபன் டென்னிசில்...
ADDED : ஆக 26, 2025 11:08 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு அல்காரஸ், ரிபாகினா முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-2' வீரர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவை சந்தித்தார். 2 மணி நேரம், 07 நிமிடம் நடந்த போட்டியில் அல்காரஸ், 6-4, 7-5, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் ரஷ்யாவின் ரூபலெவ், 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் டினோ பிரிஸ்மிக்கை வீழ்த்தினார். காஸ்பர் ரூடு (நார்வே), இத்தாலியின் பலுாச்சி இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
ரிபாகினா வெற்றி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் ஜூலியட்டா மோதினர். இதில் ரிபாகினா 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். செக் குடியரசின் கிரெஜ்சிகோவா, 6-3, 6-2 என கனடாவின் மபோகோவை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் உலகின் 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக், 6-1, 6-2 என கொலம்பியாவின் எமிலியானா அரான்கோவை வீழ்த்தினார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 7 முறை கோப்பை வென்ற அமெரிக்காவின் 45 வயது வீனஸ் வில்லியம்ஸ், 25 வது முறையாக ஒற்றையரில் களமிறங்கினார். இதில் செக் குடியரசின் முசோவாவிடம் 3-6, 6-2, 1-6 என போராடி தோற்றார் வீனஸ்.
ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் அமெரிக்காவின் மடிசன் கீஸ், 7-6, 6-7, 5-7 என மெக்சிகோவின் ரெனெட்டாவிடம் போராடி தோற்றார். மற்ற போட்டிகளில் மரியா சக்காரி (கிரீஸ்), ஆன்ட்ரீவா, பவ்லிசென்கோவா (ரஷ்யா) வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
கிவிட்டோவா ஓய்வு
செக் குடியரசின் கிவிட்டோவா 35, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் விம்பிள்டன் (2011) உட்பட, சர்வதேச டென்னிசில் 31 கோப்பை வென்றுள்ளார். 2014ல் உலகின் 'நம்பர்-2' வீராங்கனையாக உயர்ந்தார். 2016ல் வீட்டில் திருட்டு நடந்த போது, இவரது கையில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்டு வந்தார். சமீபத்தில் 17 மாதம் பிரசவ விடுப்பில் இருந்தார். நேற்று நடந்த முதல் சுற்றில் பிரான்சின் தயேன் பாரியிடம் 1-6, 0-6 என வீழ்ந்தார். சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.
* பிரான்சின் கரோலின் கார்சியா, 4-6, 6-4, 3-6 என ரஷ்யாவின் ராஹிமோவாவிடம் தோற்று, சர்வதேச டென்னிசில் இருந்து விடை பெற்றார்.
புதிய 'ஸ்டைல்'
ஸ்பெயினின் அல்காரஸ், கடந்த வாரம் கலப்பு இரட்டையரில் தலையில் முடியுடன் காணப்பட்டார். நேற்று ஒற்றையர் போட்டியில் மொட்டைத் தலையுடன் களமிறங்கினார். 'இது பிடித்திருக்கிறதா,' என ரசிகர்களை நோக்கி கேட்க, அவர்கள் விசில் அடித்து ஆர்ப்பரித்தனர். அல்காரஸ் கூறுகையில்,'' இந்த 'ஸ்டைல்' அவர்களுக்கு பிடித்துள்ளது போல,'' என்றார்.