தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா

டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா

டென்னிஸ்: அரையிறுதியில் ரிபாகினா


ADDED : நவ 04, 2025 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2025 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியாத்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடரின் அரையிறுதிக்கு ரிபாகினா முன்னேறினார்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் 'பைனல்ஸ்' தொடர் நடக்கிறது. பெண்கள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள வீராங்கனைகள் மட்டும், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன. இதன் செரினா வில்லியம்ஸ் பிரிவில் ஸ்வியாடெக் (போலந்து), அமண்டா அனிசிமோவா, மடிசன் கீஸ் (அமெரிக்கா), ரிபாகினா (கஜகஸ்தான்) உள்ளனர். முதல் போட்டியில் ரிபாகினா, அனிசிமோவாவை வென்றார்.

இரண்டாவது போட்டியில் ரிபாகினா, 3-6, 6-1, 6-0 என்ற கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். தொடர்ந்து இரு வெற்றி பெற்ற ரிபாகினா, பட்டியலில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் அனிசிமோவா, 4-6, 6-3, 6-2 என மடிசன் கீசை வென்றார். இரு போட்டியில் தோற்ற மடிசன் அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us