/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
யு.எஸ்., ஓபன்: அரையிறுதியில் அனிசிமோவா
/
யு.எஸ்., ஓபன்: அரையிறுதியில் அனிசிமோவா
ADDED : செப் 04, 2025 10:16 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு சின்னர், அனிசிமோவா, ஒசாகா முன்னேறினர்.
நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இத்தாலியின் ஜானிக் சின்னர், லோரென்சோ முசெட்டி மோதினர். இதில் உலகின் 'நம்பர்-1' சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் ஒற்றையரில் தொடர்ச்சியாக 5வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் சின்னர்.
மற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-4, 6-7, 5-7, 6-7 என கனடாவின் பெலிக்ஸ் அகர்-அலியாசிம்மிடம் போராடி தோல்வியடைந்தார். அரையிறுதியில் அலியாம்சி, 'நடப்பு சாம்பியன்' சின்னரை எதிர்கொள்கிறார்.
ஸ்வியாடெக் ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா மோதினர். இதில் ஸ்வியாடெக் 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த விம்பிள்டன் பைனலில் ஸ்வியாடெக்கிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தார் அனிசிமோவா.
மற்றொரு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 என செக்குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தினார்.
பாம்ப்ரி அபாரம்
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 33, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி 6-3, 6-7, 6-3 என்ற கணக்கில் குரோஷியாவின் நிகோலா மெக்டிக், அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடியை வீழ்த்தியது. கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார் பாம்ப்ரி.