ADDED : மார் 06, 2025 10:54 PM

குருகிராம்: ஹரியானாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, சக வீராங்கனை சஹாஜாவை எதிர்கொண்டார். இதில் வைதேகி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஜீல் தேசாய் மோதினர். இதில் அன்கிதா 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைதேகி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி, ஜெர்மனியின் ஸ்மிடிட், கொலம்பியாவின் விலாஸ்செலியர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 6-3, 6-4 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சோகா, ஆகான்ஷா ஜோடி 4-6, 3-6 என ரஷ்யாவின் மகரோவா, ரேய்ன்கோல்டு ஜோடியிடம் தோல்வியடைந்தது.