உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 21, 2026 10:11 PM

அ நிறம் | அளவு
லண்டன்: லண்டனில், ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு (ஜூன் 29 - ஜூலை 12) நடக்கவுள்ள இத்தொடரில், 'வீடியோ ரிவியூ' தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. போட்டியின் போது வீரர், வீராங்கனைகளுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், சேர் அம்பயரிடம், 'வீடியோ ரிவியூ' கேட்கலாம்.
கடந்த 2023ல் முதல் முறையாக யு.எஸ்., ஓபனில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இது, ஆஸ்திரேலிய ஓபனிலும் இடம் பெற்றுள்ளது.
இம்முறை போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜானிக் சின்னர் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்க உள்ளனர்.
