தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: இரண்டாவது சுற்றில் சபலென்கா

விம்பிள்டன்: இரண்டாவது சுற்றில் சபலென்கா

விம்பிள்டன்: இரண்டாவது சுற்றில் சபலென்கா


ADDED : ஜூன் 30, 2025 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2025 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு சபலென்கா, ஸ்விடோலினா முன்னேறினர்.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் கார்சன் பிரான்ஸ்டைன் மோதினர். அபாரமாக ஆடிய சபலென்கா 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு முதல் சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-1 என ஹங்கேரியின் அனா பான்டரை வீழ்த்தினார். லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 5-7, 6-2, 2-6 என பிரிட்டனின் சோனய் கார்டலிடம் தோல்வியடைந்தார். பிரேசிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மையா 7-6, 6-4 என சுலோவாகியாவின் ரெபெக்கா ஸ்ராம்கோவாவை வென்றார்.

மெத்வெதேவ் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வெதேவ், பிரான்சின் பெஞ்சமின் போன்சி மோதினர். இதில் மெத்வெதேவ் 6-7, 6-3, 6-7, 2-6 என அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் பிரிட்டனின் கேமிரான் நோரி 6-3, 3-6, 6-4, 7-6 என ஸ்பெயினின் ராபர்டோ பாடிஸ்டா அகுட்டை தோற்கடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us