ADDED : ஜூலை 01, 2026 11:11 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் முன்னேறினர்.
இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் மோதினர். இதில் சபலென்கா 6-1, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என, ரஷ்யாவின் அனஸ்டாசியா கசானோவாவை வீழ்த்தினார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் செக்குடியரசின் கரோலினா முசோவா, ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினா, லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
செரினா ஏமாற்றம்: முதல் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஆஸ்திரேலியாவின் மாயா ஜாய்ன்ட் மோதினர். ஓய்வு முடிவை திரும்ப பெற்று, 4 ஆண்டுகளுக்கு பின் விம்பிள்டனில் பங்கேற்ற செரினா 3-6, 7-6, 3-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். இரட்டையரில் செரினா, வீனஸ் ஜோடி களமிறங்குகிறது.
சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் ஜானிக் சின்னர், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் மோதினர். இதில் சின்னர் 7-6, 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டாமி பால் 6-3, 7-6, 6-2 என தென் கொரியாவின் சூன்வூ வோனை வீழ்த்தினார்.
