ADDED : ஜூலை 02, 2026 10:52 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு போலந்தின் ஸ்வியாடெக், செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினர்.
இங்கிலாந்தின் லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' போலந்தின் இகா ஸ்வியாடெக், செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-1, 6-4 என, பிரிட்டனின் கேட்டி ஸ்வானை வென்றார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 7-6, 6-1 என, ஸ்பெயினின் சோரிப்ஸ் டோர்மோவை வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 3-6, 7-6 என, அர்ஜென்டினாவின் சோலானா சியராவை வென்றார். சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் 7-5, 6-0 என, சீனாவின் ஜின்யு வாங்கை வீழ்த்தினார்.
ஜோகோவிச் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2, 6-2 என, பிரான்சின் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்தார். அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-2, 6-2, 7-5 என சகவீரர் பாட்ரிக் கிப்சனை வென்றார்.
