sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

/

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா


ADDED : ஜூலை 10, 2024 10:15 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு ரைபகினா, கிரெஜ்சிகோவா முன்னேறினர்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-4' வீராங்கனை கஜகஸ்தானின் ரைபகினா, 21 வது இடத்திலுள்ள உக்ரைனின் ஸ்விட்டோலினா மோதினர்.

முதல் செட்டை ரைபகினா 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார். முடிவில் ரைபகினா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக 2022 விம்பிள்டனில் கோப்பை வென்றிருந்தார்.

நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ ('நம்பர்-13'), செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா ('நம்பர்-31') மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய கிரெஜ்சிகோவா, அடுத்த செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என வென்றார். முடிவில் கிரெஜ்சிகோவா 6-4, 7-6 என வெற்றி பெற்று, விம்பிள்டன் அரங்கில் முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் பாவோலினி, அமெரிக்காவின் நவார்ரோ மோதினர். இதில் பாவோலினி, 6-2, 6-1 என எளிதாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆடாம ஜெயிச்ச ஜோகோவிச்

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் டி மினார் மோத இருந்தனர். இடுப்பு காயம் காரணமாக மினார் விலகிக் கொள்ள, ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.






      Dinamalar
      Follow us