/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டென்னிஸ்: வைஷ்ணவி அபாரம் * உலக பல்கலை., விளையாட்டில்
/
டென்னிஸ்: வைஷ்ணவி அபாரம் * உலக பல்கலை., விளையாட்டில்
டென்னிஸ்: வைஷ்ணவி அபாரம் * உலக பல்கலை., விளையாட்டில்
டென்னிஸ்: வைஷ்ணவி அபாரம் * உலக பல்கலை., விளையாட்டில்
ADDED : ஜூலை 19, 2025 10:54 PM

ரினே-ருஹ்ர்: ஜெர்மனியில் 32 வது உலக பல்கலை., விளையாட்டு நடக்கிறது. 114 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் 90 பல்கலை.,யில் இருந்து 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, 6-2, 6-4 என பின்லாந்தின் வென்லாவை வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.
பாட்மின்டன் நம்பிக்கை
பாட்மின்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி, 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்தியா சார்பில் ஒற்றையரில் சனீத் தயானந்த் (ஆண்கள்), இரட்டையரில் சதிஷ்/வைஷ்ணவி, சனீத்/சதிஷ் ஜோடி வெற்றி பெற்றது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் மலேசியாவை வென்றால் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்யலாம்.
பெண்கள் அணிகளுக்கான டேபிள் டென்னிசில் இந்தியா, 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ் அணியை சந்தித்தது. இந்தியாவின் சயாலி வாணி ஒற்றையரின் இரு போட்டியில் வென்றார். பிரித்திகா தன் பங்கிற்கு வெற்றி பெற, இந்திய அணி 3-2 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது. இதில் 0-3 என சீன தைபே அணியிடம் தோல்வியடைந்தது.
ஆண்களுக்கான வாள் சண்டை போட்டியில், கேலோ இந்தியா யூத் சாம்பியன், 17 வயது வீரர் அபினாஷ், 15 வது இடம் பிடித்தார். ஷ்ரேயா 21, ஆஹ்ரி 32வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 46 கிலோ பிரிவு டேக்வாண்டோ காலிறுதியில் இந்தியாவின் அனிகா, 0-2 என தென் கொரியாவின் யுன்சியோவிடம் தோற்றார்.