ADDED : ஜூலை 12, 2011 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளியின் தேசிய
பசுமை படை சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவில், பள்ளியின் தலைமை
ஆசிரியர் அன்புசெழியன் வரவேற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலெக்ஷ்மி
முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தேசிய
பசுமை திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட கல்வி ஆய்வாளர் சரவணராஜா, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்
மங்கையர்க்கரசி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் அறிவழகன் மற்றும் பள்ளி
மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.