/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
2 மான்கள் சுட்டுக் கொலை கும்பலுக்கு வலை
/
2 மான்கள் சுட்டுக் கொலை கும்பலுக்கு வலை
ADDED : ஆக 10, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், செந்துறை பெரிய ஏரியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் நேற்று கேட்டது. இதையடுத்து, அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, அங்கு இரண்டு மான்கள் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தன.
மான்களை மீட்டு, வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, அங்கேயே மான்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
பரிசோதனைக்கு பின், மான்களின் உடல்கள், வனத்தில் புதைக்கப்பட்டன. தப்பிய ஓடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

