/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
கோழி பண்ணையில் தீ 6,000 குஞ்சுகள் எரிந்தன
/
கோழி பண்ணையில் தீ 6,000 குஞ்சுகள் எரிந்தன
ADDED : ஆக 30, 2024 02:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த மருவத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன், 34. பொன்பரப்பி பகுதியில், 10 ஆண்டுகளாக கோழி பண்ணை நடத்தி வருகிறார். நான்கு நாட்களுக்கு முன், தலா 35 ரூபாய் மதிப்பில் 6,000 கோழி குஞ்சுகளை வளர்ப்பதற்கு வாங்கி, அதற்கான கொட்டகையில் விட்டு வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, அந்த கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 6,000 கோழி குஞ்சுகளும் எரிந்து சாம்பலாகின. தகவலறிந்த செந்துறை தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

