/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
அரசு வேலை தருவதாக மோசடி போலி நிருபருடன் ஒருவர் கைது
/
அரசு வேலை தருவதாக மோசடி போலி நிருபருடன் ஒருவர் கைது
அரசு வேலை தருவதாக மோசடி போலி நிருபருடன் ஒருவர் கைது
அரசு வேலை தருவதாக மோசடி போலி நிருபருடன் ஒருவர் கைது
ADDED : ஆக 19, 2024 06:59 AM

பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், கீழசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 34. தாதம்பேட்டையைச் சேர்ந்தவர் கார்த்தி, 37.
இருவரும் சென்னையில் வசித்தனர். 2022ல் சொந்த ஊர் வந்தபோது, கீழசிந்தாமணி முருகேசன், 64, என்பவர் பட்டதாரியான தன் மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சிப்பதை அறிந்து அவரை அணுகினர். கார்த்தி, தான் ஒரு பத்திரிக்கை நிருபர் என, அறிமுகம் செய்தார்.
அவர், 'பொதுப்பணித்துறையில் உங்கள் மகனுக்கு வேலை வாங்கி தருகிறேன்' என, உறுதி அளித்தார். இதற்காக, 3 லட்சம் ரூபாய் தருமாறு கேட்டனர்.
அவர்கள் கூறியதை உண்மை என நம்பிய முருகேசன், முன்பணமாக, 2.10 லட்சம் ரூபாயை கொடுத்தார். மீதி தொகையை வேலை வந்தவுடன் தருவதாக கூறினார்.
வேலை வாங்கி தராததுடன், பணத்தை திருப்பி தராமல் இருவரும் ஏமாற்றியதால் போலீசில் முருகேசன் புகார் செய்தார்.
அரியலுார் டவுன் போலீசார், போலி நிருபர் கார்த்தி, ராஜசேகரை சென்னையில் கைது செய்தனர்.

