/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
வழக்கறிஞர் கொலை வழக்கில் குடும்பத்தில் ஐவருக்கு 'ஆயுள்'
/
வழக்கறிஞர் கொலை வழக்கில் குடும்பத்தில் ஐவருக்கு 'ஆயுள்'
வழக்கறிஞர் கொலை வழக்கில் குடும்பத்தில் ஐவருக்கு 'ஆயுள்'
வழக்கறிஞர் கொலை வழக்கில் குடும்பத்தில் ஐவருக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 26, 2025 01:42 AM

உடையார்பாளையம்:வழக்கறிஞர் கொலை வழக்கில், அவரது உறவினர்கள் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன், 40; ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினர் சுப்பிரமணியன், 64, என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்தது.
கடந்த 2022 பிப்., 21ல் குடிநீர் பிரச்னை தொடர்பான தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், அவரது மனைவி நீலம்மாள், 55, மகன்கள் செந்தில்குமார், 36, மணிகண்டன், 29, செல்வம், 32, ஆகிய ஐந்து பேரும் சேர்ந்து அறிவழகனை கழுத்தை அறுத்துக் கொன்றனர்.
உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ஐந்து பேரையும் கைது செய்தனர். அரியலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர்வாலாண்டினா, இந்த வழக்கில் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.