/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
பிளஸ் 2 மாணவர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
/
பிளஸ் 2 மாணவர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்
ADDED : மார் 22, 2024 01:32 AM
கீழப்பழுவூர்,:அரியலுார் மாவட்டம் கீழப்பழுவூரிலுள்ள தனியார் பள்ளியில் நீட் மற்றும் ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
அங்கு தங்கி படித்து வந்த பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த கபிலன், 17, என்பவரிடம் பேச அவரது தந்தை முருகானந்தம் நேற்று இரவு, விடுதி போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது கபிலன் வருவதற்கு வெகு நேரம் ஆனது; சக மாணவர்கள் அவரை தேடினர். அப்போது, ஒரு அறையில் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் கபிலன் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கபிலன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, திருச்சி - அரியலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

