/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
குளத்தில் தலைதுாக்கிய முதலை குளித்தோர் பதறியடித்து ஓட்டம்!
/
குளத்தில் தலைதுாக்கிய முதலை குளித்தோர் பதறியடித்து ஓட்டம்!
குளத்தில் தலைதுாக்கிய முதலை குளித்தோர் பதறியடித்து ஓட்டம்!
குளத்தில் தலைதுாக்கிய முதலை குளித்தோர் பதறியடித்து ஓட்டம்!
ADDED : மே 29, 2024 02:02 AM

பெரம்பலுார்:அரியலுார் அருகே, குளத்தில் கரை ஒதுங்கியசிறிய முதலை பிடிப்பட்டது.
அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள வீரசோழபுரம் கிராமத்தில் தீர்த்தகுளம் எனும் சிறிய குளம் உள்ளது.
பொதுமக்கள் அந்த குளத்தை குளிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை குளத்தில் சிலர் குளித்துக் கொண்டிருந்த போது, முதலை ஒன்றை கண்டனர்.
அதிர்ச்சி அடைந்த மக்கள், மீன்சுருட்டி காவல் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் முதலையை குளத்துக்குள் சென்று விடாமல் விரட்டி பிடித்தனர்.
இதையடுத்து, வனத்துறையினரிடம் முதலை ஒப்படைக்கப்பட்டது. பின், வனத்துறையினர் அந்த முதலையை அணைக்கரையில் விட்டனர்.