/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
சப் ரிஜிஸ்டர் ஆபீசில் லஞ்ச ஓழிப்பு துறை சோதனையில் ரூ.23 ஆயிரம் பறிமுதல்

ADDED : அக் 19, 2024 06:40 AM

பெரம்பலுார்; ஆண்டிமடம் சார்- - பதிவாளர் அலுவலகத்தில், அங்கு பணிபுரியும் தினக்கூலி பணியாளர் கொடுத்த, கணக்கில் வராத 23,000 ரூபாயை, லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அரியலுார் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்.ஐ.,க்கள் பவுன்ராஜ் ரவி, இளையபெருமாள் ஆகியோர் கொண்ட குழுவினர், ஆண்டிமடம் சார்- - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த அலுவலகத்தில் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர், பத்திர பதிவுக்காக வந்தவர்களிடம் வசூலித்து வைத்திருந்த, 23,000 ரூபாயை சார் - பதிவாளர் சண்முகத்திடம் கொடுக்கும் போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து, பணத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.