ADDED : டிச 14, 2024 02:31 AM

அரியலுார்:மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கதிராமங்கலத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 50, இவரது மனைவி மஞ்சுளா, 41, மகன் கோபால், 28, மருமகள் ஐஸ்வர்யா, 24, பேரக்குழந்தைகள் என மொத்தம் ஏழு பேர், அரியலுார் மாவட்டம், பெரியதிருக்கோணம் கிராமத்தில் மருதையாற்றின் கரையோரம் குடிசை அமைத்து மரக்கரி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார்.
மருதையாற்றில் நேற்று வெள்ளம் பெருக்கெடுத்து, ஆற்றின் நடுவே செல்வராஜ் குடும்பத்தினர் சிக்கினர்.
அரியலுார் தீயணைப்பு வீரர்கள் மருதையாற்று வெள்ளத்தை கடந்து சென்று, குழந்தைகளை முதலில் அலுமினிய கொப்பரையில் அமர வைத்தும், பின், பெரியவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட ஏழு பேருக்கும் உடனடியாக உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
* பெரம்பலுார் மாவட்டம், எறையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன், 41, பூமிநாதன், 52, ஆகியோர் சின்னாற்று நடுத்திட்டு பகுதியில், நேற்று ஆடு, மாடுகளை மேய்க்க சென்றனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கால் இருவரும் சிக்கினர். பெரம்பலுார் தீயணைப்பு படையினர் ஆற்றில் கயிறு கட்டி அவர்களை மீட்டனர்.

