/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
செங்கல் சூளை குழி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி
/
செங்கல் சூளை குழி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி
செங்கல் சூளை குழி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி
செங்கல் சூளை குழி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி
ADDED : அக் 25, 2024 02:10 AM

தஞ்சாவூர்:அரியலுார் மாவட்டம், அரண்மனைகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 34, மாரியம்மாள் தம்பதிக்கு 2 வயதில் கோபித் என்ற ஆண் குழந்தை இருந்தார்.
மாரியம்மாள் இரண்டாவது பிரசவத்திற்காக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கடையத்தோப்பில் உள்ள தன் தாத்தா ரெங்கசாமி, 75, வீட்டிற்கு சென்று இருந்தார்; ஓராண்டாக, தன் கணவருடன் அங்கேயே வசிக்கிறார்.
கணவரும், தாத்தாவும் வாழை இலை அறுக்கும் வேலைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்று விட்ட நிலையில், 5 மாத பெண் குழந்தை, 2 வயது ஆண் குழந்தையுடன் மாரியம்மாள் வீட்டில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தையை, வெகு நேரம் ஆகியும் காணவில்லை என்றதும், மாரியம்மாள் தேடினார்.
அப்போது, அருகில், வைத்தியநாதன்பேட்டையை சேர்ந்த கவியரசனின் செங்கல்சூளையில், மண் கலவை போடுவதற்காக வெட்டி வைத்து இருந்த குழிக்குள், குழந்தை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றார். அங்கு, கோபித்தை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
செங்கல் சூளை உரிமையாளரான கவியரசன், குழியை முறையாக மூடாததால், குழிக்குள் தண்ணீர் தேங்கி, அதில் விழுந்த குழந்தை இறந்துள்ளது.
எனவே, 'குழியை உடனே மூட வேண்டும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.