/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
தொழில் வளர்ச்சி கருத்தரங்கு அரியலூரில் ஏற்பாடு
/
தொழில் வளர்ச்சி கருத்தரங்கு அரியலூரில் ஏற்பாடு
ADDED : செப் 13, 2011 12:42 AM
அரியலூர்: அரியலூரில் இன்று தொழில் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கு நடக்கிறது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் அரியலூர் மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்கம் இணைந்து நடத்தும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கான கருத்தரங்கம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு, அரியலூர் மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ், கருத்தரங்குக்கு தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ஃபாசல் அலி வரவேற்கிறார். கருத்தரங்கில் அரியலூர் மாவட்ட தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் பாக்கியநாதன், மாவட்ட தொழில் மைய நிர்வாகி சேதுபதி, தொழில்துறை வல்லுநர்கள் விஜயலெக்ஷ்மி, தனஜெயன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளை மேலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். துணை செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறுகிறார்.