பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்: பொதுக்குழுவில் தீர்மானம்
பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்: பொதுக்குழுவில் தீர்மானம்
ADDED : ஆக 17, 2025 12:49 PM

புதுச்சேரி: பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார் என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமக சிறப்புப் பொதுக்குழு நடந்தது. ராமதாசின் மூத்த மகள் காந்திமதிக்கும், பேரன் முகுந்தனுக்கும் மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு:
* பாமக தலைவர், நிறுவனராக ராமதாஸ் செயல்படுவார்.
* 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைக்க ராமதாசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
* வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக நிறுவனர் தலைமை மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.
* தமிழக அரசு தட்டி கழிக்காமல் உடனடியாக ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
* சின்னம் பெறுதல், வேட்பாளர்களுக்கான படிவம் அனைத்தும் நிறுவனர் கையெழுத்திட்டு கொடுக்க முடியும்.
* நிறுவனர் ஒப்புதல் கொடுத்த பிறகு, நிறுவனர் அழைக்கப்பட்டு பொதுக்குழு நடத்த வேண்டும்.
பொதுக்குழுவில் மொத்தம் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.