/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
மணல் கடத்தலை தடுக்காத எஸ்.ஐ.,க்கள் 'துாக்கியடிப்பு'
/
மணல் கடத்தலை தடுக்காத எஸ்.ஐ.,க்கள் 'துாக்கியடிப்பு'
மணல் கடத்தலை தடுக்காத எஸ்.ஐ.,க்கள் 'துாக்கியடிப்பு'
மணல் கடத்தலை தடுக்காத எஸ்.ஐ.,க்கள் 'துாக்கியடிப்பு'
ADDED : மார் 21, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியலுார்:அரியலுார் மாவட்டம், அரங்கோட்டை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் டயர் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்படுவதாகவும், விக்கிரமங்கலம் போலீசார் மாமுல் வாங்கிக்கொண்டு அதை கண்டுகொள்வதில்லை என, அரியலுார் எஸ்.பி., தீபக் சிவாச்சுக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக புகார் வந்தது.
இதுகுறித்து விசாரித்த எஸ்.பி., விக்கிரமங்கலம் எஸ்.ஐ., தனச்செல்வன் மற்றும் எஸ்.எஸ்.ஐ., வீராசாமி ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.