/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
5ம் வகுப்பு பிஞ்சு பலாத்காரம் காமுக ஆசிரியர் கைது
/
5ம் வகுப்பு பிஞ்சு பலாத்காரம் காமுக ஆசிரியர் கைது
ADDED : நவ 20, 2024 02:24 AM
அரியலுார்:அரியலுார் -வடக்கு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 41. இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும், 10 வயது மாணவியை, 8ம் தேதி, ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு சென்று தன் பையை வைக்குமாறு கூறினார். அம்மாணவி அந்த அறைக்கு இவரது பையை வைக்க சென்றபோது, பின்தொடர்ந்து சென்ற அவர், அந்த அறையிலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், வீட்டை தீ வைத்து கொழுத்தி விடுவதாகவும் கூறி, ஆசிரியர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காயம் அடைந்திருந்த மாணவியை கண்ட அவரது தாய் விசாரித்தார். அப்போது, ஆசிரியர் ராஜிவ்காந்தியால் நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார்.
புகாரின்படி, அரியலுார் அனைத்து மகளிர் போலீசார், காமுக ஆசிரியர் ராஜிவ்காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.