/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
தியேட்டர் ஸ்கீரினை கிழித்த இருவர் கைது
/
தியேட்டர் ஸ்கீரினை கிழித்த இருவர் கைது
ADDED : ஜன 19, 2025 12:53 AM
அரியலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் --- சிதம்பரம் சாலையில் உள்ள சி.ஆர்., திரையரங்கில், நடிகர் ரவி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது, மது போதையில் படம் பார்த்துக் கொண்டிருந்த இருவர் ஒருவருக்கொருவர் தகராறு செய்து தாக்கிக்கொண்டனர்.
அதில், அவர்களின் மொபைல் போனை துாக்கி எரிந்ததில், தியேட்டர் ஸ்கிரீன் மீது பட்டு, ஸ்கிரீன் கிழிந்தது. படம் பார்த்தவர்கள், தியேட்டர் பணியாளர்கள் சேர்ந்து இருவரையும் சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தியேட்டர் மேலாளர் நாராயணசாமி, ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.
ஜெயங்கொண்டம், அடிபள்ளத் தெருவை சேர்ந்த பிரபு, 27, அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த இளவரசன், 27, ஆகியோரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

