/
உள்ளூர் செய்திகள்
/
அரியலூர்
/
அடுக்குமாடி குடியிருப்பில் பெண் கொலையா
/
அடுக்குமாடி குடியிருப்பில் பெண் கொலையா
ADDED : மே 30, 2025 02:02 AM
அரியலுார்:-அரியலுார் அருகே, அடுக்குமாடி குடியிருப்பில், அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலுார் அரசு கலைக்கல்லுாரி சாலையில் உள்ள, தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில், இரண்டாவது தளத்தில் வாடகைக்கு வசித்தவர் பாப்பா, 44. இவரது கணவர் வைரபெருமாள், சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். மகன் சீனிவாசன் வெளியூரில் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று காலை பழைய துணி வாங்கும் பெண் ஒருவர், இவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கு, உடல் அழுகிய நிலையில் பாப்பா இறந்து கிடந்ததை பார்த்த அவர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டின் கதவு திறந்த நிலையில் இருப்பதுடன், தரையில் பிணமாக கிடந்ததால், பாப்பாவை யாரேனும், அடித்து கொன்றிருக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.