/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.89.56 கோடியில் சுரங்கப்பாதைகள்... நீண்ட நாள் பிரச்னைக்கு வருகிறது தீர்வு
/
ரூ.89.56 கோடியில் சுரங்கப்பாதைகள்... நீண்ட நாள் பிரச்னைக்கு வருகிறது தீர்வு
ரூ.89.56 கோடியில் சுரங்கப்பாதைகள்... நீண்ட நாள் பிரச்னைக்கு வருகிறது தீர்வு
ரூ.89.56 கோடியில் சுரங்கப்பாதைகள்... நீண்ட நாள் பிரச்னைக்கு வருகிறது தீர்வு
UPDATED : மார் 04, 2025 01:53 PM
ADDED : மார் 03, 2025 11:33 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில், புக்கத்துறை, படாளம் மதுராந்தகம் ஆகிய இடங்களில் 89.56 கோடி ரூபாய் நிதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பணி முடிந்து போக்குவரத்துக்கு தீர்வு ஏற்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பகுதியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் சென்று வரும் வகையில், நடை மேம்பாலத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது.
இதை முறையாக பராமரிக்காததால், நடைமேம்பாலம் சிதிலமடைந்து பழுதடைந்துள்ளது.
இதனால், பொதுமக்கள், நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, சாலையின் குறுக்கே வாகனங்கள் மற்றும் மக்கள் கடந்து செல்கின்றனர்.
மதுராந்தகம் அடுத்த, மோச்சேரி, கருணாகரவிளகம், அருந்ததிபாளையம், புதுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசியபணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு மதுராந்தகம் மற்றும் பிறபகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
நெடுஞ்சாலையில், அசூர வேகத்தில் செல்லும் வாகனங்களால், இப்பகுதியில், ஏற்பட்ட சாலை விபத்துக்களில், பலர் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இப்பகுதியில், விபத்தை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடைய சுரங்கப்பாதை, சிக்னல், சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தார்.
அதன்பின், சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தை, வருவாய்த்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், காவல்துறை ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவருக்கு, அப்போதைய கலெக்டர் கடிதம் எழுதினார். அதன்பின், சுரங்கப்பாதை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
தற்போது, சுரங்கப்பாதை அமைக்க 22.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது. ஆரம்பகட்ட பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதேபோன்று, புக்கத்துறை - உத்திரமேரூர், படாளம் - வையாவூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில், சுரங்கபாதை அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி, புக்கத்துறை - உத்திரமேரூர், படாளம் - வையாவூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்க, தலா 22.39 கோடி ரூபாய் என 89 கோடியே 56 லட்சம் ரூபாய், நெடுஞ்சாலை ஆணையம், ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.