/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : அக் 01, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கோகுலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ், 20. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், நேற்று முன்தினம் மாலை சிங்கபெருமாள் கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.
மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 5 கிராம் தங்க நகை மற்றும் 50,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.