/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகரில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
/
மறைமலை நகரில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மறைமலை நகரில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
மறைமலை நகரில் 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 12, 2024 01:41 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 400க்கும் மேற்பட்ட வணிகக் கடைகள், உணவகங்கள், நடைபாதை கடைகள் உள்ளிட்டவை உள்ளன.
இந்தப் பகுதியில், தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடய பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள், கடைகளில் தொடர்ந்து விற்கப்படுகின்றன.
பொது மக்கள் அவற்றை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது குறித்து, நகராட்சி அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, நேற்று காலை மறைமலை நகர் நகராட்சி, 2வது வார்டு, பொத்தேரி பகுதியில் உள்ள மொத்தமாக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில், மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, கடையில் வைத்திருந்த 1,000 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை, தொடர்ந்து நடைபெற உள்ளதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.