/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,018 மனுக்கள்
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 1,018 மனுக்கள்
ADDED : ஆக 02, 2024 10:30 PM
மதுராந்தகம்,:கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களிடம், அனைத்து துறைகள் சார்ந்த கோரிக்கை மனுக்களை, 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடத்தி பெற, ஊரக வளர்ச்சி துறை ஏற்பாடு செய்தது.
இம்முகாமில், வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, வீட்டு வசதி, மாற்றுத் திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலம், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மின் வாரியம் உள்ளிட்ட துறையினர் பங்கேற்றனர்.
நேற்று, மதுராந்தகம் ஒன்றியம், கிணார் ஊராட்சி சேவை மையக் கட்டடம் அருகே நடந்த முகாமில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில், பொதுமக்களிடமிருந்து 1,018 மனுக்கள் வரப்பெற்றன. இதில், மகளிர் உரிமைத்தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன.