/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கொள்முதல் நிலையங்களில் ரூ.110.82 கோடிக்கு நெல் விற்பனை
/
செங்கை கொள்முதல் நிலையங்களில் ரூ.110.82 கோடிக்கு நெல் விற்பனை
செங்கை கொள்முதல் நிலையங்களில் ரூ.110.82 கோடிக்கு நெல் விற்பனை
செங்கை கொள்முதல் நிலையங்களில் ரூ.110.82 கோடிக்கு நெல் விற்பனை
ADDED : ஏப் 28, 2024 02:01 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில், குறைந்த அளவே விவசாயம் செய்யப்படுகிறது.
பாலாறு, ஏரிகள், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட நீராதாரங்களை பயன்படுத்தி, மாவட்டத்தில் சம்பா, நவரை, சொர்ணவாரி பருவங்களில், 1,67,500 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஜனவரி மாதம் அறுவடைக்காக, சில மாதங்களுக்கு முன் நாற்று நடப்படும். சம்பா பருவத்தில், வடகிழக்கு பருவ மழைக்கு முந்தைய அறுவடைக்காக நடப்படும்.
இடம் தேர்வு
நெல் அறுவடை செய்வதற்கு முன், மத்திய, மாநில அரசுகள் நெல் கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கும்.
அதன்பின், வேளாண் மற்றும் வருவாய்த் துறையினர் கிராமங்களில் ஆய்வு செய்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்வர்.
அதன்பின், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் உத்தரவிடுவார். தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும்.
அதன்பின், நெல்லுக்கு உண்டான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக 104, தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம் வாயிலாக 20 என, 124 நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
2023 - 2024, அக்., மாதம் வரை, 46 நெல் கொள்முதல் நிலையம் திறந்து, 3,685 விவசாயிகள், 27,009 டன் நெல் விற்பனை செய்தற்கு, 62 கோடியே 33 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
அதன்பின், பிப்., மாதம் துவங்கி நேற்று முன்தினம் வரை, 54,453 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
விவசாயிகள் நலன் கருதி, சன்னரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிக்கு 2,310 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,265 ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தீர்மானம்
இதுவரை, 7,544 விவசாயிகளின் வங்கிக்கணக்கில், 110.82 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மே மாதம் வரை, கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள், சென்னை வடக்கு மண்டலத்திற்கு லாரிகள் வாயிலாகவும், விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு, சரக்கு ரயில்கள் வாயிலாகவும், முதல் கட்டமாக, 8,000 டன் நெல் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, 7,544 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 110.82 கோடி ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்கள் மே மாதம் வரை செயல்படும்.
- நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்
செங்கல்பட்டு.

