/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உய்யாலி குப்பத்தில் 11ம் ஆண்டு கபடி போட்டி
/
உய்யாலி குப்பத்தில் 11ம் ஆண்டு கபடி போட்டி
ADDED : ஜூலை 23, 2024 01:34 AM

புதுப்பட்டினம்,
கல்பாக்கம் அடுத்த வாயலுார் உய்யாலிகுப்பம் மீனவர் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த யு.கே., பிரதர்ஸ் விளையாட்டுக்குழு சார்பில், 11ம் ஆண்டு கபடி போட்டி, ஜூலை 20ம், 21ம் தேதிகளில் நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 52 கபடி அணியினர் விளையாடினர்.
இறுதியில், முதல் பரிசு 30,000 ரூபாய் மற்றும் கோப்பையை, கானத்துார் ரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தசிவலிங்கம் நினைவு விளையாட்டுக்குழு வென்றது.
இரண்டாம் பரிசாக, 25,000 ரூபாய் மற்றும் கோப்பையை,கடலுார் கே.டி.கே., அணியும், மூன்றாம் பரிசாக, 15,000 ரூபாய் மற்றும் கோப்பையை, உய்யாலிகுப்பம் யு.கே., பிரதர்ஸ் அணியும் வென்றன.
மேலும், நான்காம் பரிசாக, 15,000 ரூபாய் மற்றும் கோப்பையும், ஐந்து முதல் எட்டாம் பரிசாக, தலா 5,000 ரூபாய் மற்றும்கோப்பையும்வழங்கப்பட்டன.