/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை
/
12 மணி நேரம் மின் தடை திருக்கச்சூரில் அவஸ்தை
ADDED : ஆக 12, 2024 04:19 AM
மறைமலை நகர், : மறைமலை நகர் நகராட்சி, 19வது வார்டு திருக்கச்சூர் பகுதியில், பெரியார் நகர், அண்ணா நகர், மலைக்கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, மறைமலை நகர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு, இந்தப் பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டது. நேற்று நண்பகல் வரை மின் தடை நீடித்ததால், அப்பகுதிவாசிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
இந்தப் பகுதியில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் தடை ஏற்பட்டு வருகிறது. மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால், முறையாக பதில் அளிப்பதில்லை என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.