/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநகர பஸ்களில் 12 மணி நேர வேலை சி.ஐ.டி.யு., புகார்
/
மாநகர பஸ்களில் 12 மணி நேர வேலை சி.ஐ.டி.யு., புகார்
மாநகர பஸ்களில் 12 மணி நேர வேலை சி.ஐ.டி.யு., புகார்
மாநகர பஸ்களில் 12 மணி நேர வேலை சி.ஐ.டி.யு., புகார்
ADDED : மே 11, 2024 09:59 PM
சென்னை:மாநகர பேருந்துகளில் 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும் என கோரி, தொழிலாளர் நலத்துறையிடம் சி.ஐ.டி.யு., புகார் அளித்துள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் தயானந்தம், எம்.டி.சி., பணிமனைகள் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3,000த்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5,000த்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர், நடத்துனர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் எட்டு மணி நேரம், 16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். எட்டு மணி நேர பணிக்கு ஒரு வருகை பதிவும், 16 மணி நேர பணிக்கு இரண்டு வருகை பதிவும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 2019ல் எட்டு மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி, ஒரு வருகை பதிவுடன் 500 ரூபாய் ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பையடுத்து, இது கைவிடப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் 12 மணி நேரம் வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு. தொழிலாளர்களின் உடல் நலன், இயற்கை நியதிக்கும் எதிரானது. எனவே, 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.