ADDED : ஜூலை 09, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் குமார், 47. தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர், மங்களாபுரத்தில் தங்கி, கிழக்கு தாம்பரத்தில், ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அவருடன், அதே ஊரை சேர்ந்த இரண்டு பேர் தங்கி, அவரதுகடையில் வேலை செய்கின்றனர்.
ஜூலை, 5ம் தேதி, செயின், டாலர், மோதிரம் உள்ளிட்ட 13 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய், மொபைல் போன், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை, ஒரு பையில் போட்டு வீட்டு அலமாரியில் வைத்திருந்தார்.
நேற்று காலை, பையை எடுத்து பார்த்தபோது,அதிலிருந்த 13 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. பணம் உள்ளிட்ட மற்றவை இருந்தன.
இது குறித்து, தாம்பரம்போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.