/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
13 வயது சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'போக்சோ'
/
13 வயது சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : செப் 13, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,:விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24. தாம்பரத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
அதே பகுதியில், தெரிந்தவரின் 13 வயது மகளை ஆசை வார்த்தை கூறி, கர்ப்பமாக்கியுள்ளார்.
சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து, சில நாட்களுக்கு முன், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் தாய் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், ராஜேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.