/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மடையத்துார் வனப்பகுதி சாலைக்கு 15 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
/
மடையத்துார் வனப்பகுதி சாலைக்கு 15 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
மடையத்துார் வனப்பகுதி சாலைக்கு 15 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
மடையத்துார் வனப்பகுதி சாலைக்கு 15 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்
ADDED : ஆக 22, 2024 12:18 AM

திருப்போரூர்:திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலையிலிருந்து, மடையத்துார் ஊராட்சிக்கு பிரிந்து செல்லும் சாலை உள்ளது. இதில், 650 மீட்டர் வனப்பகுதி சாலையாக உள்ளது.
இச்சாலை வழியாக, மடையத்துார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்றுவருகின்றனர். வனப்பகுதி சாலையாக இருப்பதால், சீரமைக்க அனுமதி கிடைக்காமல், 15 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருந்தது.
வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி தராததால், சாலையை சீரமைப்பதில் தாமதமாவதாக, ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க, வனத்துறை சார்பில் ஒரு மாதத்திற்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 26 லட்சம் ரூபாய் செலவில், 650 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில், இச்சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா, நேற்று நடந்தது.
திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா, ஊராட்சி தலைவர் சந்திரா, தி.மு.க., திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலர் சேகர் ஆகியோர் பங்கேற்று, பூமி பூஜைகள் செய்து, சாலை பணியை துவக்கி வைத்தனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின், சாலைக்கு விமோசனம் கிடைத்ததால், மடையத்துார் பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.