/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பஸ்ஸில் பெண்ணிடம் 16 சவரன் திருட்டு
/
பஸ்ஸில் பெண்ணிடம் 16 சவரன் திருட்டு
ADDED : ஜூன் 30, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த கூடலுார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45. இவரது மனைவி துளசியம்மாள், 40.
இருவரும், நேற்று முன்தினம், வீட்டில் இருந்த 16 சவரன் தங்க நகைகளை புதிதாக மாற்ற, செங்கல்பட்டில் உள்ள நகைக்கடைக்கு, மறைமலைநகரில் இருந்து அரசு பேருந்தில் சென்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று பார்த்தபோது, பையில் வைத்திருந்த 16 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து, துளசியம்மாள் நேற்று செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.