/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
2 வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை கொள்ளை
/
2 வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை கொள்ளை
ADDED : ஆக 29, 2024 10:30 PM
செய்யூர்:செய்யூர் அடுத்த நாகமலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன், 55. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்க்க சென்றார்.
நாடகம் முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் இருந்த பீரோவை உடைத்து, 8 சவரன் நகை மற்றும் 42,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து, செய்யூர் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, கூவத்துார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலதி, 35. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் கிராமத்தில் நடந்த நாடகத்தை பார்க்க சென்றுள்ளார்.
நாடகம் முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 சவரன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் 10,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.
கூவத்துார் காவல் நிலையத்தில், மாலதி அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.