ADDED : பிப் 27, 2025 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'பொக்கிஷம்' கைவினைப் பொருட்கள் விற்பனை கண்காட்சி, இன்றும், நாளையும் சென்னை தரமணியில் உள்ள, என்.ஐ.எப்.டி., எனும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது.
கண்காட்சியை இன்று பகல் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும்; நாளை காலை 10:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும் பார்வையிடலாம்.
கண்காட்சியில், சேலம் வெண்பட்டு, சிறுமுகை கைத்தறிகள், புதுச்சேரி காகித கைவினைப் பொருட்கள், வில்லியனுார் மண்பாண்ட தயாரிப்புகள், ஆரணி பட்டுப் புடவைகள், மதுரை கைத்தறி, பழவேற்காடு பனை ஓலை கைத்தொழில், பரமக்குடி, அனகாபுத்துார் கைத்தறி, திண்டுக்கல் சின்னாளப்பட்டி கைத்தறிகள், கண்காட்சியில் இடம் பெற உள்ளன.